&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&
Sunday, 17 July 2011
உலாவரும் உன்நினைவு
என் உள்ளத்தின் உவகைகளை
உனதாக்கிக் கொண்டவனே
உன் வரவை எண்ணி மனம்
உறக்கத்தை உதறிவிட்டு
உற்சாக உல்லாசத்தில் உலாவருகின்றது உன் நினைவோடு
எப்போது வருவாயென
எதிர்பார்த்திருந்த என் விழிகள்
இன்றே என நீ கூறியதைக்கேட்டு
இமைக்க மறுப்பதைக்கண்டு
இதழ்கள் பரிகாசத்துடன் புன்னகையை
இறைத்துக்கொண்டிருக்கின்றன....(தனா)
No comments:
Post a Comment