&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&

Tuesday 23 August 2011

என் விழிகள் சேமித்த உன் விம்பங்கள்


அன்பே உன்னைப் பார்த்ததும் பேசவென
ஓராயிரம் வார்த்தைகளை என் உதடுகள்
ஒத்திகை பார்த்தபோதிலும் நீ வந்த நொடியில்
என் உதடுகள் ஊமையாகிக்கொண்டன
நான் பேசுவேன் என நீ காத்திருந்தாய்
நீ பேசுவாய் என நான் காத்திருந்தேன்
கடைசியில் சிலநிமிடங்கள் கரைந்துபோன பின்
நீ விடைபெற்று செல்ல நான் சிலைபோல்
விழி மூடாது உன் நினைவோடு வீடு வந்தேன்
என் விழிகள் சேமித்த உன் விம்பங்கள்
மூடும் என கண்மடல்களுக்குள்
மூழ்கி விடக்கூடும் என பயந்து ........(தனா)

உன் ஒற்றை வார்த்தை


சேற்றில் வளரும் தாமரையாய்
உன் நினைவூற்ரில் படர்கிறது
என் எதிர்காலக்கனவுகள்

ஒற்றைக்கால் கொக்காக
தாமரை தவமிருக்கிறது
சூரியனின் பார்வைக்காக..

அது போல் தான் நானும் உன்
ஒற்றை வார்த்தை கேட்டு
உயிர் வாழ்கிறேன்
என் மனதிற்குள் வாழும்
உன் மார்பில் தலை சாய்த்து....(தனா).

உன் நினைவுச்சுமை

கனவு வந்து போன பின்பும்
காட்சி மனதில் எஞ்சியிருப்பது போல்
நீ வந்து போனதற்கான தடயங்களின்
நிழல்களை என்மனதுக்குள் தந்துவிட்டு
நிஜங்களை நீ பறித்துசெல்ல- நான்
நிழலாய் பின்தொடர்கின்றேன் -உன்னை
உந்தன் நினைவுகளைச்சுமந்த படியே...(தனா)

நிலவான உன் நினைவு

என் அனுமதி இன்றியே எனைத்தேடி வந்து
உன்னை எனக்கு அழகாய்
அறிமுகம் செய்துவைத்தாய்
சிலையாய் இருந்த என் மனதுக்குள்
சிறு உயிர்ப்பை கொடுத்தாய்
உன் புன்னகை சாரல் தெளித்து
அலையலையாய் நீ சொன்ன
வார்த்தை கேட்டு எனக்குள்
மலையாய் தோன்றிய கவலைகள்
மடுவாய் என் முன் காட்சியளிக்க
என் மனம் செடியாகி மலரத்தொடங்கியது
மணம் வீசும் மல்லிகைப்பூவை பிரசவித்து
நிலவான உன் நினைவை சுமந்தபடியே....(தனா)

ஜனனத்துளிரான உன் நினைவு

அன்பே !
உன் வரவை அறிந்த நொடி முதல்
விழிகள் இரண்டும் இமைக்க
மறுத்து விடுமுறை கேட்டபடி
நீ வரும் பாதையில்
பார்வைப் பூக்களைத் தூவி
மலர்ப்பாதை அமைத்து
காத்திருக்கின்றவேளையில்
என் மனம் யாசிக்கின்றது உன்னிடம்
ஜனனத்துளிராய் துளிர்த்த
உன் நினைவுகளுக்கு உந்தன்
பார்வை எனும் நீரூற்றி என் மனதை
பசுமை வயலாய் மாற்றிவிடு என....(தனா)