&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&

Tuesday, 29 March 2011

அவன் செய்து வைத்த அறிமுகம்

தொலைதூரம் இருந்தபோதும்
அழையா விருந்தாளியாய்
அவன் மனதில் நானும்
என்மனதில் அவனும் குடியேறிக்கொண்டோம்
பரிமாறிக்கொள்வதற்காய் நமக்குள்
உணர்வுகள் உருவாகிக்கொண்டன..
கறைபடியா அவன் உள்ளம்
கவர்ந்திழுக்கும் கண்கள்
தொடத்துடிக்கும் விரல்கள்
தொடாமலே தரும் முத்தம்
இன்னும் பல நினைவுகள்
அசைபோட்டுக்கொண்டன
அவன்வரவை அறிந்தபோது
புள்ளிமானாய் துள்ளியோடினேன்
அவனைநோக்கி...அங்கே எனக்கு
புதுமான் ஒன்றை அறிமுகம் செய்துவைத்தான்
இவள்என் மனைவியென்று......(தனா)

No comments:

Post a Comment