&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&

Tuesday, 29 March 2011

அன்பே உன் அந்திநேர
வருகை கண்டு
என் கன்னங்கள்
செந்நிறம் பூசிக்கொள்கின்றன

இமைகள் இரண்டும்
இமைக்க மறுக்க
இதழ்களோ இணைய
மறுக்கின்றன....

கைவிரல்கள் தாளம்போட
கால்விரல் கோலம் போடுவதை
பார்த்து என்வீட்டு
மல்லிகைச்செடியுடன்
எதிர்வீட்டி மல்லிகைச்செடி
எம் உறவை பற்றி
கிசுகிசுத்துக் கொள்கின்றன...
என்முன்னே.....

பிரகாசிக்கும் உன்முகம்
பார்த்து நான்
பிரசவித்துக்கொண்டே
இருக்கின்றேன் புன்னகையை

இருந்தும் எனக்குள்
இன்னும் பேராசை தான்
'''நிலவே'''
இரவில் மட்டுமல்ல
நீ பகலிலும்
வரக்கூடாதா என்று....(தனா)

1 comment:

  1. வார்த்தை ஜாலம் உங்கள் கவி வரிகளில் அழகோ அழகு!!

    ReplyDelete