&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&

Sunday, 27 March 2011

வரமொன்று தந்துவிடு....!

அதிகாலை பொழுதிலேயே
அரங்கேறும் உன் நினைவு
உயிர் கொண்ட ஓவியமாய்
உலவுகிறது என் மனதில்
பிரிவொன்றை பரிசளித்து என்னை
நடைப்பிணமாக்கிப் போன பின்பும்
உறவென்று உனை அழைப்தற்காய்
தினம் துடிக்கிறது என் உதடு

வாழ்வொன்று தர வழியில்லை என்றால்
வரமொன்று தந்துவிடு அன்பே
நீ என்னை விட்டு நீங்கிய கணமே
நான் நீறாக வேண்டும் என்று..........(தனா).
 

2 comments: