&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&
Thursday, 24 March 2011
தூது செல் ஓடையே...!
சலசலக்கும் ஓடையே
இந்த சங்கீதத்தை எங்கு கற்றாய்
என்னவனின் சிரிப்பலை போல்
நீ இசைந்து கொண்டேசெல்கிறாயே
பள்ளம் தேடி ஓடும் வெள்ளமான
உன்னைப் போல் தினமும்
அவன் உள்ளம் நாடி செல்லும்
பேதை எனக்காக நீ......
மெல்லமாய் அவனிடம் சொல்லிவிட்டு வா
கள்ளமில்லா அவன் உள்ளத்தில் நான்
கைதியாக விரும்புகிறேன் என்று.......(தனா).
அருமை கவியே..��
ReplyDelete