&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&
Friday, 1 April 2011
உன்னோடான என் பிரியம்
வீசும் தென்றல் கூட வேறு திசை மாறி போகிறது இதுவரை விடுமுறை கூட கேட்காத என் இதயம் - இன்று விடுதலைப் பத்திரம் நீட்டுகிறது.. ... நேற்றுவரை தீபமாக ஒளிர்ந்த உன் நினைவுகள் - இன்று தீப் பிளம்பாய் சுடுகிறது நீ எனை விட்டு நீங்கிய காரணத்தால்....
ஏன் இந்த மாற்றம் உன் அன்பில்
எதுவுமே புரியவில்லை எனக்கு
நேற்று உன் மெளனம் கண்டு நான்
பிரிய மனமின்றி
விட்டுச் சென்ற உன் பிரியங்களை
பிரியமுடன் தான் ஏற்றாயா ? இல்லை
பிரிவை ஏற்க மறுத்தாயா?
புரியும் படி சொல்லிவிடு
No comments:
Post a Comment